வெளிநாடுகளில் ரிலீஸாகும் மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படம்..

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படம் வெளிநாடுகளில் ரிலீஸாக உள்ளது.
தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
#Kudumbasthan ❤️
— Manikandan (@Manikabali87) January 29, 2025
Overseas Release by @Ayngaran_offl - UK, France, Germany, Norway, Sri Lanka, Malaysia, Singapore, USA, Canada, UAE and the Gulf. pic.twitter.com/jQtJAeEW74
மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பஸ்தன் படம் 5 நாட்களில் ரூ.9.9 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதன்படி, இப்படத்தை ஐயங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வருகிற 31-ந் தேதி உலகளவில் வெளியிடப்பட உள்ளது. அதாவது, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், வலைகுடா நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளது.