விஜய் சேதுபதி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய மணிகண்டன்...!

manigandan

நடிகர் விஜய் சேதுபதி குறித்து குடும்பஸ்தன் பட கதாநாயகன் மணிகண்டன் நெகிழ்ச்சியாக ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். 


நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் படத்திற்குப் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் நேற்று (ஜனவரி 24) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நடிகர் மணிகண்டன் பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அடுத்தது நடிகர் மணிகண்டன், இயக்குனராக அவதாரம் எடுக்க போவதாகவும் அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் மணிகண்டன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர், “எனக்கு விஜய் சேதுபதியை காதலும் கடந்து போகும் படப்பிடிப்பின் போது தான் தெரியும். அதன் பிறகு இருவரும் நெருக்கமாக பழகிவிட்டோம். விஜய் சேதுபதி என் தங்கையின் அறுவை சிகிச்சைக்கு உதவினார்.


அடுத்தது அவரை நான் என் தங்கையின் திருமணத்திற்கு முறையாக பத்திரிக்கை வைத்து அழைக்கவே இல்லை. எப்பொழுதோ ஒருமுறை என் தங்கைக்கு திருமணம் என்று சொல்லி இருந்தேன். ஆனால் திடீரென்று என் தங்கையின் திருமணத்திற்கு வந்து ரூ.3 லட்சத்தை என் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார். ‘கைல புடி வச்சுக்கோ’ என்று சொன்னார். ஆனால் அந்த பணத்தை தான் நான் மண்டப வாடகை போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தினேன். இல்லையென்றால் நான் கடந்தான் வாங்கி இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story