வெற்றிகரமான 50வது நாளில் மணிகண்டனின் 'குடும்பஸ்தன்'

manikandan

மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படம் வெற்றிகரமாக 50வது நாளில் திரையரங்குகளில் ஓடுகிறது. 

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

manikandan இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.   

manikandan
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 7ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியானது. இந்நிலையில், வெற்றிகரமாக 50வது நாளில் திரையரங்குகளில் ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Share this story

News Hub