ரசிகர்கள் வரவேற்பை பெறும் மணிகண்டனின் லவ்வர்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கல்லூரி மாணவராக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். பீட்சா 2, விக்ரம் வேதா, காலா என பல படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்து அசத்திய மணிகண்டனுக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்த படம் ‘ஜெய்பீம்’. அந்த படத்தில் மணிகண்டனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ‘குட்நைட்’ எனும் படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது இயக்குநர் பிரபுராம் இயக்கத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் மணிகண்டன். இப்படத்திற்கு லவ்வர் என்று தலைப்பு வைக்கப்பட்டது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது.இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து கௌரி பிரியா ரெட்டி, கண்ணன் ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாக்ஸிக் காதல், காதலர்களுக்கு மத்தியில் வரும் சிறு சிறு பிரச்சனைகளை அழகாக எடுத்து காட்டுவதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டியிருக்கின்றனர்.