பிரபுராம் இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படம்

பிரபுராம் இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படம்

மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ஜெய்பீம் படத்தை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, மணிகண்டன் மற்றும் அதர்வா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மத்தகம் தொடரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, கர்நாடகாவின் கோகர்னா நகரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

Share this story