மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த ஹீரோயின் -யார் தெரியுமா ?

Sai Pallavi missed an important role in Manirathnam's movie! Guess what

‘லப்பர் பந்து’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, அப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். சமீபத்தில் வெளியான ‘பரிமளா அண்ட் கோ’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘டிசி’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து கிஷன் தாஸ் ஜோடியாக அவர் நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கும் இப்படத்துக்கு ‘சீ யூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஜுனம் இசை அமைக்கிறார். முன்னதாக கிஷன் தாஸ் நடித்த ‘ஆரோமலே’ என்ற படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்திருப்பது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சீ யூ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

Share this story