மனிதர்கள் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

manithargal

மனிதர்கள் படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார். 

ஸ்டுடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள். 


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லரை இயக்குநர் பா ரஞ்சித் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

Share this story