கணவரை செல்லமாக வாழ்த்திய மஞ்சிமா மோகன்...

கணவரை செல்லமாக வாழ்த்திய மஞ்சிமா மோகன்...

கணவர் கௌதம் கார்த்திக்கிற்கு மனைவி மஞ்சிமா மோகனின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவரை செல்லமாக வாழ்த்திய மஞ்சிமா மோகன்...

பிரபல நடிகரும், கார்த்திக் மகனுமான கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. பின், சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் காதலிப்பதாக கடந்தாண்டின் அக்டோபர் 31 ஆம் தேதியன்று அறிவித்தனர். இதைதொடர்ந்து இருவரின் திருமண விழா, நெருங்கிய நண்பர்களுடன் நவம்பர் 28 ஆம் தேதியன்று நடந்து முடிந்தது. அதைதொடர்ந்து கிறிஸ்துமஸ், பொங்கல் என வரிசையாக பண்டிகைகளை கொண்டாடினர். பின் பத்து தல, 1947 படங்களில் நடித்த கெளதமிற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் போஸ்ட் பதிவிட்டு வந்தார். இன்று கெளதம் கார்த்திக்கின் பிறந்தநாளையொட்டி, அவரது மனைவி மஞ்சிமா மோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர். நீ என் வலிமையின் தூண், என் நம்பிக்கைக்குரியவன், என் ஆத்ம தோழன், என் இரட்டைச் சுடர், மற்றும் பல!! இந்த வாழ்க்கை பயணத்தில் நான் உன் அருகிலேயே இருப்பேன், உன் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உன்னை ஒருபோதும் விழ விடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்!" என அன்புடன் பதிவிட்டுள்ளார்.  அன்பு பொங்க பதிவிட்டுள்ளார் மஞ்சிமாவின் இந்த க்யூட் வாழ்த்து பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
 

Share this story