மெய்யான இன்பம், இந்த பைக் ரைடு – இரவில் வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ‘மஞ்சு வாரியர்’.

photo

பிரபல நடிகை மஞ்சுவாரியர் தான் புதிதாக வாங்கிய BMW பைக்கில் இரவு நேரங்களில் பயிற்சி எடுத்து வருகிறாராம். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

photo

மலையாள நடிகையான மஞ்சுவாரியர், கோலிவுட்டில் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான ‘அசுரன்’ படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து கடந்த பொங்கலுக்கு வெளியான அஜித்தின் வலிமை படத்தில் நடித்து ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அந்த படத்தின் சமயத்தில் அஜித்துடன் இணைந்து பயணத்திலும் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் புது BMW நிறுவனத்தின் ‘120GS’ பைக்கை வாங்கினார்.

photo

இந்த நிலையில் அவர் சூட்டிங் முடித்துக்கொண்டு குறிப்பாக இரவு நேரங்களில் புது பைக்குடன் தனது நண்பரும் பிரபல மலையாள நடிகருமான செளபின் சாகிருடன் இணைந்து  பைக் ஒட்ட பயிற்சி எடுத்து வருகிறார். பைக் ஓட்ட அவர்தான் மஞ்சுவுக்கு முழு பயிற்சியும் வழங்கி வருகிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள் விரைவில் அஜித்தை போல உலகம் சுற்ற வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

photo

 

Share this story