சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வேட்டையன் படத்தில் நடிக்கவில்லை : மஞ்சு வாரியார்

Manju warrior


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அதனால் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முற்றிலுமாக முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Manju warrior
இந்த நிலையில் வேட்டையன் படத்தில் நடித்த மஞ்சு வாரியார் கேரளாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது படம் குறித்து பேசினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது வேட்டையன் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு "நான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவியாக நடிக்கின்றேன். எனக்கு முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் எனத் தெரியாது. நான் ஜெய் பீம் என்ற தரமான படத்தினை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன்.எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடிக்கின்றேன் என்பதை விடவும், ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கின்றேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது" என கூறியிருந்தார். மேலும் இந்த படம் நிச்சயம் பலருக்கும் பிடிக்கும் என கூறி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Share this story