புரொமோஷன்னு கூட பாக்காம மஞ்சுவாரியர் பேசிய அந்த வார்த்தை – 'பீப் போட்டுக்கோங்க' என கூல் பதில்.

photo

மஞ்சு வாரியருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை ஏனென்றால தனுஷின் 'அசுரன்' படத்தின் அவரது நடிப்பை பாரத்து முரளாத ஆளே இல்லை எனலாம். ஒரு மகனை இழந்த சோகத்தையும், இரண்டு குழந்தைகளுக்காக வாழும் தாய்மையையும், தவறை தட்டி கேட்கும் தைரியமான பெண்ணாகவும் கச்சிதமாக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து 'துணிவு' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது காரணம் டிரைலரில் வெளியான மஞ்சுவாரியரின் ஸ்டண்ட் காட்சிகள். இந்த படத்தில் அஜித்தின் டீம் மேட்டாக நடித்துள்ளார்.

photo

இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி ரிலீஸ்ஸாகவுள்ள, துணிவு படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக படத்தின் இயக்குநர் எச். வினோத் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர், அப்போது அஜித் பேசிய வசனம் ஒன்றை பீப் போடாமல் பேசி அனைவரையும் மிரளவைத்துள்ளார் மஞ்சு.


 

அந்த வார்த்தையை கையில் துப்பாக்கியுடன் பேசிய மஞ்சுவாரியல் கூலாக பீப் போட்டுகோங்க என சொல்கிறார். 'என்னமா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்களே ....' என்பது மாதிரியா இருந்தது இயக்குநர் மற்றும் ஆடியன்ஸ் ரியாக்க்ஷன், தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

Share this story