மன்மோகன் சிங் மறைவு - ‘சிக்கந்தர்’ டீசர் ரிலீஸ் தள்ளிவைப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு, ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இன்று (டிச.27) சல்மான்கான் தனது 59-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் காலை 11:07 மணிக்கு வெளியாக இருந்தது. தற்போது இந்த டீசர் நாளை காலை 11:07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை பாதிப்பால் நேற்றிரவு காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ டீசர் இன்று வெளியாகாது என்று அறிவித்துள்ளது படக்குழு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிக்கந்தர்’. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தினை சாஜித் நாடியாவாலா தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.