மனோஜ் பாரதிராஜா மறைவு... பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அப்டேட் தள்ளிவைப்பு.

pradeep

பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் இன்று வெளியாகவிருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில்  கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில்  ரூ.100 கோடியை கடந்தது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான பிரதிப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கிர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ள இதில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 11.07 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உயிரிழந்த நிலையில், இப்படத்தின் அறிவிப்பு மற்றோரு நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story