'மன்சூர் அலி கான்' பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- கண்டித்த 'தென்னிந்திய நடிகர் சங்கம்'.

photo

மன்சூர் அலிகானின் வரம்பு மீறிய பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

photo

 லியோ படத்தில் திரிஷாவுடன் ரேப் சீனில் நடிக்க ஆவலாக இருந்ததாகவும் ஆனால் அவருடன் ஒரு சீனில் கூட நடிக்கவில்லை என வரம்பு மீறி பேசியிருந்தார் மன்சூர் அலிகான். அதற்கு த்ரிஷா தனது கண்டனத்தை பதிவுசெய்ய அவரை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள், இயக்குநர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லமல் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

‘திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் சவாலாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பலவேறு சவால்களை வென்று சாதித்து வரும் நடிகைகள் குறித்து இப்படி மோசமாக பேசியது வனமையாக கண்டிக்க வேண்டிய இன்று அதற்காக அவர் உண்மையான மனதுடன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.  

Share this story