நடிகர் விஜய்யை தெரியும் : சாதனை வீராங்கனை மனு பாக்கர்.!!

manu bhekar

எனக்கு தமிழக முதலமைச்சரை தெரியாது என்றும் நடிகர் விஜய், பிரக்னானந்தாவை தெரியும் என்றும் ஒலிம்பிக் சாதனை வீராங்கனை மனு பாக்கர் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். தாயகம் திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மிகுந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற  மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு கிரீடம் அணிவித்து பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்தனர். தொடர்ந்து  மாணவர்களுடன் மனு பாக்கர் உரையாடினார்.

 அவர்களின் அழைப்பைச் சற்றும் மறுக்காமல் ஏற்றுக் கொண்ட மனு பாக்கரும் மாணவிகளுடன் நடனமாடி விழாவிற்கு மேலும் உற்சாகம் சேர்த்தார். அவர் மாணவிகளுடன் நடமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது.

Share this story