"சூரி கூட நடிக்கிறீங்களா என பலர் பேர் என்னிடம் கேட்டாங்க... " : நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்...!

சூரி கூடவா நடிக்கிறீங்க என்று என்னிடம் பலர் கேட்டதாகவும், அதற்கான சரியான பதிலை தான் வழங்கியதாகவும் மாமன் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ’மாமன்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில், ஐஸ்வர்யா லட்சுமி பேசும்போது, "சூரி கூடவா நடிக்கிறீங்க?" என்று என்னிடம் பலர் கேட்டதாகவும், அதற்கான சரியான பதிலை தான் வழங்கியதாகவும் கூறினார்.அவர் இது குறித்து மேலும் பேசும் போது, "என்னிடம் நிறைய பேர் ஒரு கேள்வியை கேட்டார்கள். ‘உங்களுக்கு சூரியுடன் நடிக்க ஓகேவா?’ என்ற கேள்வியை கேட்டார்கள். நான் அவர்களிடம், ‘ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அந்த கேள்வி எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை.
உண்மையில், நான் சூரியுடன் நடிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சூரி மாதிரி ஒரு மனிதருடன் நடிப்பதில் எனக்கு பெருமை தான். ஏனெனில், அவர் ரொம்ப உயரத்தில் நான் இப்போது உள்ள எந்த சூப்பர் ஸ்டார் நடிகரை எடுத்து கொண்டாலும் அவர்களுக்கு இணையாக சூரி உள்ளார்.அவர் ஒரு நேர்மையான மனிதர். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் மரியாதை இருக்கும். எல்லா மக்களிடமும் அவருக்கு ஒரு அன்பு இருக்கும். எனவே, அவருடன் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக மிகவும் நன்றி," என்று ஐஸ்வர்யா லட்சுமி பேசினார். அவருடைய இந்த பேச்சின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.