சத்யராஜ் நடிக்கும் மரகத நாணயம் 2-யார் யார் நடிக்கின்றனர் தெரியுமா ?
கடந்த 2017ம் ஆண்டு வெளியான பேண்டஸி, காமெடி படம் ‘மரகத நாணயம்’. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.கே.சரவன் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இப்படத்தின் 2ம் பாகம் தயாராகியுள்ளது. ஏ.ஆர்.கே.சரவன் எழுதி இயக்க ஆதி, பிரியா பவானி சங்கர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். மேலும், சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‘முதல் பாகத்தை போல இதிலும் சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இந்த கதையில் எப்படி கனெக்ட் ஆகிறார்கள், எந்த இடத்தில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் அப்படியே இருக்கும். முதல் பாகத்தில் நிக்கியின் வேடம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது போல், இந்த பாகத்திலும் அவரது கதாபாத்திரம் வலுவானதாகவும் ஸ்பெஷலாகவும் இருக்கும்’ என்றார்.

