“2 லோடிங்…” அப்டேட் கொடுத்த இயக்குநர்- ‘மரகத நாணயம் 2’ கம்மிங்.

photo

கற்பனை கலந்த நகைச்சுவை படமாக வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, முனிஷ்காந்த், ஆனந்த் ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல் என பலர் நடித்திருந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஏ. ஆர். கே சரவணன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இயக்குநர் தனது சமூகவலைதள பக்கத்தில் “2 லோடிங்” என பதிவிட்டு மரகதகல்லின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக விரைவில் மரகத நாணயம் பாகம் 2 வரவுள்ளது உறுதியாகியுள்ளது.

photo

இந்த படத்தில் ரீல் ஜோடியாக நடித்த ஆதி, நிக்கி கல்ரானி ரியல் ஜோடியான நிலையில் மீண்டும் இணைந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்களா? படத்தில் வேறு யாரெல்லாம் இணையபோகிறார்கள் என படம் குறித்த அடுத்தடுத்த அட்பேட்டுகளில் தெரியவரும்.


 

Share this story