வடிவேலுவுடன் மீண்டும் பகத் பாசில் -மாமன்னன் ஜோடி நடிக்கும் மாரீசன் எப்போது ரிலீஸ் தெரியுமா ?

நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து மாமன்னன் என்ற படத்தில் நடித்தார் .இப்படம் வெற்றிகரமாக ஓடியது .பல கோடிகளை வசூலில் அள்ளியது .மீண்டும் இந்த இருவரையும் வைத்த்து மாரீசன் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டு வருகிறது .இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது .இந்த ஜோடியின் காமெடி கலந்த படத்தை பார்க்க மக்கள் ஆவலாக உள்ளனர்
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.இந்த நிலையில், 'மாரீசன்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையொட்டி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.