ஞாபக மறதிக்காரராக நடித்த வடிவேலு -மாரீசன் விமர்சனம்

mareesan
ஞாபக மறதிக்காரராக வடிவேலு நடித்த மாரீசன் படம் தியேட்டரில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .இதன் விமர்சனம் நாம் இப்பதிவில் காணலாம் 
திருடன் தயா (பஹத் பாசில்), ஒரு வீட்டுக்குள் திருட வருகிறான். அங்கே வேலாயுதம் (வடிவேலு) சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறார். அம்னீசியா காரணமாக எல்லாவற்றையும் மறந்து போன வேலாயுதம், தயாவை தன் மகன் என நினைத்து, தன்னை அவிழ்த்து விடும்படி சொல்கிறார். ஆனால் தயா அவரை விடுவிக்க ரூ.25,000 கேட்கிறான். பணம் இல்லாத வேலாயுதம் ஏ.டி.எம்-க்கு செல்லத் தயார் என்கிறார். அங்கே தான் தயா, வேலாயுதத்தின் கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பதைப் பார்த்துவிடுகிறான். அதனை எப்படியாவது அடிக்க வேண்டும் என தீர்மானித்து, வேலாயுதத்துடன் பயணம் தொடர்கிறான்.
படத்தின் பெரும் வலு, வடிவேலு மற்றும் பஹத் பாசிலின் நடிப்பே. இருவரும் படத்தின் பெரும்பகுதியை தங்கள் திறமையால் தூக்கி நிறுத்துகிறார்கள். வடிவேலுவின் முகபாவனை, உடை அலங்காரம், மறதி நிலையிலுள்ள பேச்சு அனைத்தும் மனதில் நிற்கும். பஹத் பாசில் தனது சுறுசுறுப்பான நடிப்பில் பார்வையாளர்களை ஈர்க்கிறார்.
விவேக் பிரசன்னா, சித்தாரா, ரேணுகா, கோவை சரளா உள்ளிட்டோர் கதை முன்னேறும் விதத்தில் உதவியுள்ளனர். சித்தாராவின் சில காட்சிகள் கண்கலங்க வைக்கும். ஒருசில இடங்களில் வடிவேலுவின் நடிப்பு பார்வையாளரை நெகிழ வைக்கும். 

Share this story