மார்கழி திங்கள், கிடா திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியீடு

மார்கழி திங்கள், கிடா திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்கழி திங்கள். இப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். புதுமுகங்களைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இன்று ஓடிடி தளத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் வெளியானது. 

மார்கழி திங்கள், கிடா திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியீடு

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘கிடா;’.  பூ ராமு, காளி வெங்கட் , மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி,  ஆகியோரது  நடிப்பில் , தமிழ் சினிமாவை உயர்த்தி பிடிக்கும் உன்னத படைப்பாக கிடா திரைப்படம்  உருவாகியிருக்கிறது.  மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை  சொல்லும் கதை இந்தப்படம்..  இந்தப்படம் முழுவதுமாக  முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே  கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படம் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 
 

Share this story