மீண்டும் வெளியீட்டு தேதியை மாற்றிய ‘மார்கழி திங்கள்’ படக்குழு- காரணம் இதுதான்!

photo

மனோஜ் பாரதி ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.


இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மார்கழி திங்கள்’. இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்தது. மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.   இந்த நிலையில் ஏற்கனவே படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவிருந்த ‘மார்கழி திங்கள்’ மாற்றப்பட்டு அக்டோபர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு காரணம் விஜய்யின் லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாவதுதான் என கூறப்படுகிறது.

Share this story