மார்கழி திங்கள் படத்தின் முன்னோட்டம் வெளியானது

மார்கழி திங்கள் படத்தின் முன்னோட்டம் வெளியானது

மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகும் மார்கழி திங்கள் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்கழி திங்கள். இப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மார்கழி திங்கள் படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

படத்தின் வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story