பர்த்டே ட்ரீட்டாக வந்த 'துருவ் விக்ரம்-மாரிசெல்வராஜ்' பட அப்டேட்.

photo

குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் லிஸ்டில் இணைந்தவர் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், கர்ணன் படத்தின் மூலம் தன்னை வெற்றி இயக்குனராக நிலை நிறுத்திக்கொண்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதியை வைத்துமாமன்னன்படத்தை இயக்கினார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


மாமன்னன்படத்தின் ரிலீசுக்கு முன்னர் சிறிய இடைவெளியில்வாழைஎன்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள அந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறதுஇதற்கிடையேமாமன்னன்படத்திற்கு முன்னரே துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருந்தார். ஆனால் உதயநிதி கேட்டுக்கொண்டதால்மாமன்னன்படத்தில் கமிட்டானார். ‘மாமன்னன்திரைப்படம் வெளியாகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார்

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படமாக உருவாக உள்ளதாக தகவலகள் வந்துள்ளது. இந்த நிலையில் இன்று துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு மாரி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மாரிசெல்வராஜ் மற்றும் துருவ் இருவரும் ஜெர்சி அணிந்துள்ளனர். இந்த போஸ்டர் மேற்கண்ட தகவலைஉறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Share this story