மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் வடிவேலு.‌.

vadivelu

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வந்தவர் வடிவேலு. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட  பிரச்சனைகளால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்டிருந்தார். சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த வடிவேலு, பிரச்சினைகள் சரியானதால் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். 

 vadivelu

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த வடிவேலுவிற்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த  'மாமன்னன்' படத்தில் நடித்தார். அந்த படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த அவருடைய நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி நடிகராக பார்த்து வந்த வடிவேலுவை இந்த படத்தின் மூலம் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

vadivelu

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார். இத்தாலியில் மாபெரும் வெற்றிப்பெற்ற 'லைப் இஸ் ப்யூட்டிபுல்' படத்தை மாரி செல்வராஜ் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். அந்த படத்தில் வடிவேலுவை கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Share this story