கமலை வைத்துக்கொண்டே ‘தேவர் மகன்’ படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ்... சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு பேச்சு !

maamannan

கமலை வைத்துக் கொண்டே ‘தேவர் மகன்’ படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கமலை வைத்துக் கொண்டே ‘தேவர் மகன்’ படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

maamannan

அதில் தேவன் மகன் பார்த்துவிட்டு எடுக்கப்பட்ட படம் தான் மாமன்னன். தேவன் மகன் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் எல்லாமே இருக்கு. அந்த நேரத்தில் நாட்களை கடக்கமுடியாமல் இருந்தேன். ஒரு சினிமா ஒரு சமூகத்தை எப்படி புரட்டி போடுகிறது. அந்த படத்தை மக்கள் எப்படியெல்லாம் எடுத்துகிறார்கள். பாசிட்டிவ், நெகட்டிவ் என எப்படி மாறுது, ஒரு பக்கம் அது ஃபிலிம் லாங்குவேஜா, அது எந்த இடத்தில் இருக்கிறது. மற்ற பக்கம் அது சமூகத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரியா தப்பானு தெரியாம திணறிக்கிட்டு இருந்தேன். 

maamannan

எல்லா இயக்குனரும் தேவன் மகன் திரைப்படத்தை பார்த்திவிட்டு தான் படம் எடுப்பாங்க. அது ஒரு ஒரு மாஸ்டர் ஸ்டோக். ஆனால் அந்த படம் ஒரு பெரிய மனப்பிறழ்வை ஏற்படுத்திய படம். படம் ரத்தமும் சதையுமாக இருந்தது. சினிமா எப்படி புரிந்துக்கொள்வது என தெரியல ?. இந்த படம் சரியா தப்பானு தெரியாம மனதில் அப்படி ஒரு வலி. 

maamannan

தேவர் மகன் உலகத்தில் பெரிய தேவர், சின்ன தேவர் இருக்காரு. இதுக்குள்ள எங்க அப்பா இருந்தா எப்படி இருப்பாருனு முடிவு பண்ணி, எங்க அப்பாவிற்காக பண்ண படம் தான் ‘மாமன்னன்’. கமல் சாரால் பண்ண முடிந்தது. அது இத்தனை காலம் தாண்டியும் தேவர் மகன் படம் ஒரு ஸ்கிரீன்பிளேவின் மாஸ்டரா இருக்குது.

maamannan

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்குவதற்கு முன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு தான் படம் இயக்கினேன். தேவர் மகன் படத்தில் வடிவேலு சார் பண்ண இசக்கி கதாபாத்திரம் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மான்னனா மாறுனா எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம் என்று கூறினார்.  

இப்படி தேவர் மகன் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்த மாரி செல்வராஜ், பாபநாசம் குறித்து பேசியிருந்தார். கமலின் இரண்டு படங்கள் குறித்தும் மாரி செல்வராஜ் வைத்துள்ள விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த பேச்சை கேட்ட கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். 


 

 

 

Share this story