நெல்லையில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாரி செல்வராஜ்

நெல்லையில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாரி செல்வராஜ்

தெற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், வீடுகள் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நெல்லை நகர்ப்பகுதியில் மழை வெள்ளத்தால் கான்கிரீட் வீடு சில நொடிகளில் இடிந்து தரமட்டமானது. மீட்பு பணிகள் அரசு அதிகாரிகள், மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

நெல்லையில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாரி செல்வராஜ்

இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜூம் இணைந்து களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Share this story