பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்..

பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் மாரி செல்வராஜ். இவர் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்பளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Stay tuned to witness our #Bison 's First Look on 7th March! #BisonKaalamaadan 🦬 2025@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi #AmeerSultan @rajisha_vijayan @editorsakthi @Kumar_Gangappan… pic.twitter.com/D4ItuGV8fb
— Mari Selvaraj (@mari_selvaraj) March 5, 2025
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைபடம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.