மாரி செல்வராஜ் இயக்கும் 'பைசன்' பட அப்டேட்

pyson

பைசன் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். அந்த வகையில் இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதன் பின்னர் இவர், ரஜினி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

bison

இதற்கிடையில் தான் இவர், துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அதன்படி இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்பளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

bison

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதே சமயம் படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு சென்னை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், பைசன் படத்தின் இன்றுடன் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
 

Share this story