தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் மாரி செல்வராஜின் 'பைசன்' ...!

துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது.
In a land of chaos, one player dares to dream 🔥#BisonKaalamadan will light up screens this Diwali, October 17 🎆#BisonKaalamaadanOnOct17 pic.twitter.com/QITUCeurmX
— Applause Entertainment (@ApplauseSocial) May 3, 2025
இந்த நிலையில் பைசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 'பைசன்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.