மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'பைசன்' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு...!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாக கூறப்படுகிறது.
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
— Mari Selvaraj (@mari_selvaraj) March 7, 2025
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். 🦬
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan 🦬@applausesocial… pic.twitter.com/8ACSMdys4B
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட மாரி செல்வராஜ், “நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால்... நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன் — பைசன் (காளமாடன்)” எனக் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் துருவ் விக்ரம், களத்தில் விளையாட தயாராக இருப்பது போல் காட்சியளிக்கிறார்.