நடிகர் மாரிமுத்து மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்


இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் மூலமாக தமிழ்நாடு மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் ஆதி குணசேகரன் என்ற மாரிமுத்து. இவர் இயக்குநர் என்பதை கடந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் இன்று தொலைகாட்சி தொடருக்கு டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. இது அவரது குடும்பத்தினர்கள் மட்டுமன்றி மொத்த திரை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து, இயக்குநர் முத்தையா, சுசீந்திரன், நடிகர் பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலர் நேரில் சென்றும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், மறைந்த மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து, டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


 

Share this story