"இளையராஜா என் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது எனக்கு பெருமை’ -மாரி செல்வராஜ்

ilaiyaraja-22

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தேனியில் தொடங்கியது. இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ராகவி (அறிமுகம்), ‘வாழை’ ராகுல் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு துவக்க விழாவில் இளையராஜா குத்துவிளக்கேற்றி படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார். மாரி செல்வராஜ் பேசும்போது, ‘எனது படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகவும், கோலாகலமாகவும் பூஜையுடன் தொடங்கியது இல்லை. இளையராஜாவை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காலங்கள் உண்டு. இன்று அவர் என் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது எனக்கு பெரும் பெருமை’ என்றார்.

Share this story