தனுஷ், மாரிசெல்வராஜ் இணையும் படத்தின் புது அப்டேட்.

photo

சூப்பர் ஹிட் வெற்றிபடமானகர்ணன்படத்திற்கு பிறகு, தனுஷ், மாரிசெல்வராஜ் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷ் மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். இது அவரின்  15வது தயாரிப்பாக அமைய உள்ளது. தனுஷின் வொண்டார்பார் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்கிறார்கள்.இந்த நிலையில் படத்தின் சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

photo

 2021ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான படம்கர்ணன்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ், உதயநிதி நாயகனாக நடிக்கும்மாமன்னன்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வெளியானது.

photo

அந்த படம் தனுஷின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக அமைய உள்ளதாம்; படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடக்க உள்ளதாம். அதற்காக மாமன்னன் பட வெளியீட்டிற்கு, பிறகு மாரிசெல்வராஜிற்கு அலுவலகம் அமைத்து கொடுத்து ப்ரீ புரொடக்ஷன் பணிகளை தொடங்கும் படி கூறியுள்ளாராம் தனுஷ். அதுமட்டுமல்லாமல் பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளார்களாம். தொடர்ந்து படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story