‘மாரி செல்வராஜ்’ இயக்கத்தில் ‘கவின்’- லேட்டஸ்ட் தகவல்.

photo

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

சின்னத்திரையில் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில படங்கள் நடித்தார் அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு லாஸ்லியாவுடன் ரிலேஷன்ஷிப் சர்ச்சையில்  சிக்கி மிகவும் பிரபலமானார். பிக்பாஸ்ஸை தொடர்ந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்கி லிஃப்ட், டாடா போன்ற நல்ல படங்களையும் கொடுத்தார். இந்த நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலியை சமீபத்தில் மணந்துக்கொண்டார்.

photo

இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படம் துருவ் விக்ரமின் படத்திற்கு பிறகு, தனுஷ் படத்திற்கு முன் மாரிசெல்வராஜால் இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this story