வரலாறு காணாத மழை!......-மக்களை காக்க அரசுக்கு கோரிக்கை விடுத்த இயக்குநர் ‘மாரிசெல்வராஜ்’.

photo

தனது தனித்துவமான திரைப்படங்களால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். திருநெல்வேலி, புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் அங்கு பெய்து வரும் வரலாறு காணாத மழையால், நிறைய கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை, உதவி செய்யுங்கள் என கைகூப்பி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

photo

அவர் வெளியிட்டுள்ள பதிவில்” வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின்  வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

Share this story