‘மார்க் ஆண்டனி’ படத்தின் ‘கருப்பண சாமி’ பாடல் வெளியீடு.

photo

மார்க் ஆண்டனி படத்தின்  நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.

photo

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. விஷால் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ள  இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக இப்படம் அமைந்துள்ளது. இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது இந்த படத்தின் டீசர், டிரைலர், மூன்று பாடல்கள் வெளியான நிலையில் தற்போது ‘கருப்பண சாமி’ என்ற நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.

Share this story