மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஷால், எஸ். ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 
இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 

மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் 25 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியதுடன், 100 கோடி ரூபாய்க்கு வசூலித்து உள்ளது. இந்நிலையில், வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Share this story