ரூ.100 கோடி வசூலை கடந்தது மார்க் ஆண்டனி

ரூ.100 கோடி வசூலை கடந்தது மார்க் ஆண்டனி 

மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது

ரூ.100 கோடி வசூலை கடந்தது மார்க் ஆண்டனி 

மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் 101 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Share this story