மூன்று மொழிகளில் டப்பிங் பேசும் விஷால்.. ‘மார்க் ஆண்டனி’ செம்ம அப்டேட் !
விஷால் நடிப்பில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் அடுத்து வெளியாகவிருக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பெரிதும் விஷால் நம்பியிருக்கிறார். இந்த படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
முதல்முறையாக இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் மூன்று மொழிகளில் நடிகர் விஷால் டப்பிங் பேசியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
Dubbing in 3 languages for #MarkAntony by @VishalKOfficial @Adhikravi @iam_SJSuryah @vinod_offl @riturv @gvprakash pic.twitter.com/XyJizouqPL
— Kollywoodtoday (@Kollywoodtoday) May 6, 2023