மாஸ் காட்டும் ‘மார்க் ஆண்டனி’ – முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

photo

விஷாலில் கம்பேக் படமாக அமைந்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் நேற்று தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

நடிகர் விஷால், எஸ். ஜே சூர்யா இணைந்து நடித்து, மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படம்  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக  நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்வித்தியாசமான கதைகளம் கொண்ட இந்த படத்தில் ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான மார்க் ஆண்டனி முதல் நாளில் ரூ. 7 முதல் 9 கோடிவரை வசூலித்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் உள்ளதால் தொடர்ந்து படம் வசூலில் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story