‘மார்க் ஆண்டனி’ படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் பல தடைகளை கடந்து இன்று ரிலீஸ் ஆகியுள்ள மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் நல்ல கம்பேக்காக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைகளம் கொண்ட இந்த படத்தில் ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுவருகிறது.
பாசிட்டிவான விமர்சனங்களை காணமுடிகிறது, படம் கேங்ஸ்டர் கதைக்களத்துடன் கூடிய டைம் டிராவல் படமாக, காமெடி ஜானரில் கொடுத்துள்ளார் ஆதி ரவிசந்திரன், குறிப்பாக படத்தின் இடைவேளை, சில்க் ஸ்மிதா காட்சி, டான்ஸ் என அனைத்தும் சூப்பர். மொத்தத்தில் படம் ரசிகர்களுக்கு சென ட்ரீட்.
படத்தின் முதல் பாதி நடிகர் அஜித் குமார் ரசிகர்களை நிச்சயம் கவரும் , நடிகர் விஜய்க்கு தேங்ஸ் கார்டு, சில்க் ஸ்மிதா, ‘அடியே மனம் நில்லுனா நிக்காதடி…’ பாடல், கார்த்தியின் வாயிஸ் ஓவர் என அனைத்தும் அருமை, சில இடங்களில் சலிப்பை கொடுத்தாலும் படம் சூப்பர்.
இரண்டாவது பாதி டைம் டிராவல் மூலமாக ரெட்ரோ உலகுக்குள் நம்மை இட்டு செல்கிறது. பஞ்சுமிட்டாய் சேலைகட்டி…. பாடல் அல்டிமேட்….. மொத்தத்தில் படம் கலக்கலாக இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகிறது.