வீடியோ வெளியிட்டு எதிர்பார்பை கூட்டிய ‘மார்க் ஆண்டனி’ படக்குழு.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ள நிலையில் படக்குழு அதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரைலர் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளனர்.
மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படத்தில் நடிகர் விஷால் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
#MarkAntonyTrailer from tomorrow !!#MarkAntony#MarkAntonyFromSep15 pic.twitter.com/FVNP5si11p
— Vishal Film Factory (@VffVishal) September 2, 2023
நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக இப்படம் அமைந்துள்ளது. இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது இந்த படம். இப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தில் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆர்வத்தை தூண்டும் விதமாக மினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அபிநயா துப்பாகியுடன் நிற்க, எஸ்.ஜே சூர்யா நடனமாடிக்கொண்டே வருகிறார். படத்தின் டிரைலர் எப்படி உள்ளது என்பதை நாளை பார்க்கலாம்.