‘மார்க் ஆண்டனி’ படத்தை முடித்த தெலுங்கு நடிகர்.. விஷால் கொடுத்த சூப்பர் அப்டேட் !
மார்க் ஆண்டனி படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் தனது பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
டைம் டிராவல் கதையில் முதல்முறையாக கேங்ஸ்டர் படமாக உருவாகிறது ‘மார்க் ஆண்டனி’. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வருகின்றனர். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். ப்ரீயட் மற்றும் தற்காலம் இருவேறு ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்து நடித்து வந்த காட்சிகள் நிறைவுபெற்றுள்ளது. இதை விஷால் மற்றும் சுனில் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வின் புகைப்படங்களை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
& it’s a warp for #MarkAntony today for me & my dear brother & darling @suneeltollywood
— Vishal (@VishalKOfficial) May 14, 2023
It’s been a wonderful experience & magnificent journey, thank u @Adhikravi, thank u @vinod_offl
Can’t wait to show u all the movie, i am sure u will love it, coming very soon to theatres… pic.twitter.com/PHJHXZwahu