விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை... ‘மார்க் ஆண்டனி’ குறித்து செம்ம அறிவிப்பு !

mark antony

 விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. ‘லத்தி’ படத்தை முழுவதுமாக முடித்துள்ள விஷால், தற்போது இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லனாக மிரட்டவுள்ளார். 

mark antony

இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு ரித்து வர்மா இந்த படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் இவர், துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். 

mark antony

இந்த படத்தின் ஒரு பகுதி கதைக்களம் 1970- ஆம் ஆண்டு இருந்த சென்னையில் போன்று படமாக்கப்பட உள்ளது. இதற்காக அன்று இருந்த சென்னை போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. 

Share this story