தெலுங்கில் பாட்டு பாடி அசத்திய விஷால்.. பட்டையை கிளப்பும் ‘மார்க் ஆண்டனி’ அப்டேட்

mark antony

‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக நடிகர் விஷால் தெலுங்கி பாட்டு பாடி அசத்திய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக உருவாரும் இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். 

mark antony

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. ப்ரீயட் படமாக உருவாகியுள்ள இந்த படம் இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், 1990-களில் நடப்பது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

mark antony

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.   இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘அதிருது மனமே’ என தொடங்கும் அந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் கர்ஜிக்கும் குரலில் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷனை விஷால் பாடியுள்ளார். இது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

 

Share this story