மார்க் ஆண்டனி படத்திற்கு ஏகபோக வரவேற்பு...ரசிகர்களுடன் கண்டு ரசித்த படக்குழு
விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது.
விஷாலின் 33-வது படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி உள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார் அதோடு எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி, நடிகை அபிநயா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது மார்க் ஆண்டனி திரைப்படம். படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படக்குழுவினரும் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
nullMARK ANTONY team at Rohini 🔥🔥🔥. FDFS..🔥🔥
— Prashanth (@iam_prashu) September 15, 2023
SJ SURYA IS HAPPY 😊😊#Vishal #ARR #ARRahmanConcert #ARRConcert #ARRahman #Jawan #JawanBoxOffice #JawanCollection #JawanBlockBuster #INDvPAK #INDvPAK #PAKvIND #Asiacup2023 #Thalaivar171 #LokeshKanagaraj #Leo #LeoAudioLaunch… pic.twitter.com/vBHRJDekTU