அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘மர்மர்’..!

‘மர்மர்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘மர்மர்’. இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக் மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரோஹித் மேற்கொண்டுள்ளார்.
மார்ச் 7-ம் தேதி வெளியான படம் ‘மர்மர்’. புதுமையான வகையில் சொல்லப்பட்ட இப்படத்தின் கதைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஆகியவை கைப்பற்றி இருக்கின்றன. இன்று (ஏப்ரல் 4) முதல் இரண்டு ஓடிடி தளங்களிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது.