விஷாலுடன் திருமணமா?…உண்மையை உடைத்த நடிகை அபிநயா..!

நடிகை அபிநயா தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை அபிநயா தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஈசன், ஆயிரத்தில் ஒருவன், வீரம், ஏழாம் அறிவு, தனி ஒருவன் என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேசமயம் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷாலுடன் திருமணம் குறித்த செய்திகளுக்கு நடிகை அபிநயா பதிலளித்துள்ளார்.
அதாவது நடிகை அபிநயா, விஷால் நடிப்பில் வெளியான பூஜை, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனவே அபிநயா, விஷாலை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களை வெளியாகி வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அபிநயா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் 15 வருடங்களாக தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அபிநயா, விஷாலுடன் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.