காவல் நிலைய பின்னணியில் உருவாகும் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’... வரலட்சுமி பட டீசர் வெளியீடு !

ஆரவ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் வரலட்சுமி. தற்போது தன்னை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’. இந்த படத்தில் வரலட்சுமியுடன் இணைந்து ஆரவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் சந்தோஷ் பிரதான், மகத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தள்ளனர். ‘கொன்றால் பாவம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தயாள் பத்மநாபன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
காவல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் கதைக்களத்தை கொண்ட படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் மே 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Enter the world of #MaruthiNagarPoliceStation - https://t.co/rUdIoarpMh
— Arya (@arya_offl) May 2, 2023
Premiers May 19th on @ahatamil@varusarath5 @Aravoffl @ActorSanthosh @MahatOfficial@Vivek_Rajgopal #yazar_christopher @dayalpadmanaban @DoneChannel1 @ManikanthKadri#MNPS #AhaOriginal #Ahatamil